;
Athirady Tamil News

கல்முனை பொலிஸ் நிலைய புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை!! (படங்கள்)

0

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச் சுஜீத் பிரியந்த தலைமையில் புதன்கிழமை(29) காலை 6.30 மணியளவில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடைகள் வாகனங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸ் நிலையத்திலுள்ள வாகானங்களின் நிலையையும் பரிசோதனை மேற்கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 7 =

*