மேலும் 110 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்!! (வீடியோ)

சீனாவில் கல்வி கற்கும் 110 மாணவர்கள் இன்று (29) நாடு திரும்பியிருப்பதாக சீனாவின் பேஜிங் நகரில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதுவரை 380 மாணவர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள். நேற்று 66 மாணவர்கள் நாடு திரும்பினார்கள். மேலும் 484 மாணவர்கள் சீனாவில் இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளர் இனங்காணப்படுவாராயின், அதுபற்றி உடனடியாக அறிவிக்கப்படவிருக்கிறது. கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 23 பேர் அங்கொட தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதில் எட்டுப் பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அங்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, மூவரின் பரிசோதனை அறிக்கைகள் தற்சமயம் கிடைத்திருக்கின்றன.
இதில் சீனப் பெண் ஒருவர் இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய இருவருக்கும் இந்த நோய் தொற்று ஏற்படவில்லை. மேலும் ஐந்து பேருக்கு இது தொடர்பான அறிக்கை வழங்கப்படவிருக்கிறது.
வைரஸ் பரவல் பற்றி அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.
வைரஸ் பரவலை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக உயர்ந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!
கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)