;
Athirady Tamil News

டேவிட் மக்கினன் குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம்!! (படங்கள்)

0

இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனேடிய நாட்டின் இலங்கைக்கான உயர்தானிகர் டேவிட் மக்கினன் தலைமையிலான மூவர் அடங்கிய உயர்மட்டக்குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்தனர்.

குறித்த குழுவினர்கள் யாழ் மாநகர சபைக்கு விஐயம் செய்துடன் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டினை அலுவலகத்தில் சந்தித்து கலந்துறையாடியுள்ளனர்.

இவ் சந்திப்பில் கடந்த எட்டு வருடங்களாக யாழ் மாவட்ட அபிவிருத்திகள், கனடா டொரோண்டோ மாநகரத்திற்கு,யாழ் மாநகரத்துக்கு இடையிலான நீண்டகால அபிவிருத்தியினை முன்னேடுப்பது பற்றியும்,விரிவாக கலந்துறையாயப்பட்டன.

இவ் சந்திப்பில் கனேடிய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*