;
Athirady Tamil News

சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை அமைச்சகம்..!!

0

சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு 563 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28,018 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சீனா தவிர 25 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. பிலிப்பைன்ஸ், ஹாங்காங் நாடுகளில் தலா ஒருவர் பலியாகி இருக்கிறார்கள். இந்த 25 நாடுகளிலும் சுமார் 400 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சீனாவின் வுகான் நகருக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக சென்ற 645 இந்தியர்களை தனி விமானம் மூலம் கடந்த வாரம் மத்திய அரசு சொந்த நாட்டிற்கு அழைத்து வந்தது.

சீனாவில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள்

இந்தியா திரும்பிய அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்ட 645 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டிலேயே கேரளாவை சேர்ந்த 3 பேரை தவிர வேறு யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*