;
Athirady Tamil News

பசுவை உண்ணும் புலிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? கோவா எம்.எல்.ஏ. கேள்வி..!!

0

கோவா மாநில சட்டசபையில் நேற்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.

அப்போது அம்மாநிலத்தின் மஹடேய் வனப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கடந்த மாதம் தங்கள் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை அடித்து உணவாக உண்ட பெண் புலி மற்றும் அந்த புலியின் 3 குட்டிகளையும் அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.

சர்ச்சில் அலிமோ

அப்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சர்ச்சில் அலிமோ, ” பசுவை உண்ணும் மனிதர்கள் தண்டிக்கப்படும் போது அதே பசுவை உண்ணும் புலிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? வன உயிரியலை பொருத்தவரை புலிகள் முக்கிய உயிரினமாக இருக்கலாம். ஆனால் மனிதர்களை பொருத்தவரை பசுக்கள் தான் முக்கியம்’’ என அவர் தெரிவித்தார்.

இந்த விவாதத்தின் முடிவில் புலிகள் உள்ளிட்ட விலங்குகளால் தாக்கப்பட்டு தங்கள் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு 4 நாட்களுக்குள் இழப்பிடு வழங்கப்படும் என கோவா மாநில முதல்மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 10 =

*