;
Athirady Tamil News

கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிராக வசந்தபுரம் மக்கள் போராட்டம்!!

0

யாழ்ப்பாணம் காக்கைதீவு – அராலி வீதியில் நீண்டகாலமாக மிருகக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரியப்படுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் வசந்தபுரம் பகுதி மக்களால் இந்தப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரங்கள் அனைத்தும் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டன.

போராட்ட இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபையின் பொறியியலாளர்கள் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு போடப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றுவதாகவும் அவ்விடத்தில் சட்டவிரோதமாக குப்பை போடுவரை கைது செய்வதற்காக உடனடியாக கண்காணிப்பு கமரா பொருத்துவதாகவும் உறுதி வழங்கினர்.

அதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − sixteen =

*