;
Athirady Tamil News

பொலிஸ் அதிகாரி கொலை – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்!!

0

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பொலீஸ் சாஜன் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யபட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி. றிஸ்வான் இன்று (07) உத்தரவிட்டார்.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஆயித்தியமலை மூன்றாங் கட்டை பிரதேசத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவரும் மட்டக்களப்பு புதூர் 7 ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 55 வயதையுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை சிவராசவின் பண்ணை வீட்டின் முன்னால் வீதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்துவரும் ஆயித்தியமலை தேவாலய வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமட் அஸ்மி, வவுணதீவு நாவற்காடு ஈச்சந்தீவைச் சேர்ந்த முன்னாள் போரளியான றமேஸ் என்றழைக்கப்படும் குணசேகரன் சுரேந்திரன் ஆகியோரை பொலிஸார் அன்றைய தினம் கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

காயங்களுடன் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*