;
Athirady Tamil News

மாணவன் ஒருவருக்கு பல்கலை. வளாகங்களுக்குள் நுழைய இடைக்காலத்தடை!! (வீடியோ)

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவன் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான (Out of Bounds) இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் முதுநிலை மாணவர்கள் சிலர் புதுமுக மாணவிகள் சிலர் மீது மோச பகிடிவதையில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கிடைத்த தகவலையடுத்து ஒழுக்காற்று குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்துக்கு நேற்றுச் சென்றிருந்த குழு அங்குள்ள அதிகாரிகள், மாணவர்கள் சிலரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. எனினும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தரப்பிடமோ, குற்றஞ்சாட்டப்படும் தரப்பிடமோ விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று அறியமுடிகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

#மிரட்டல் யாழ் பல்கலைக் கழக சீனியர்களின்….

#மிரட்டல்யாழ் பல்கலைக் கழக கிளிநொச்சி தொழில்நுட்ப பிரிவின் வளாக மாணவர்களின் மற்றுமொரு மிரட்டல் படலம் # சோத்துக்கு லைன்ல நிக்க சொன்ன சீனியர்கள்.# அடிக்குற அடியில கன்னம் பழுக்கும்.# யாரை இருந்தாலும் சரி கட்டாயம் கை வைப்பான்.

Gepostet von KMV Media Creation am Samstag, 8. Februar 2020

கிளிநொச்சி தொழில்நுட்பபீடத்தில் கிடுக்குப்பிடி விசாரணை… 8 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை!!

பகிடிவதைக்கு நடவடிக்கை எடுக்க ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 20 =

*