;
Athirady Tamil News

குறி வைத்து தாக்கிய நியூசிலாந்து.. படுமோசமான ரெக்கார்டு.. பும்ராவுக்கு நேர்ந்த கதி! (வீடியோ, படங்கள்)

0

இந்தியா – நியூசிலாந்து இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் பும்ராவை குறி வைத்து தாக்கி ரன் குவித்தனர் நியூசிலாந்து வீரர்கள். காயத்தில் இருந்து மீண்டு வந்த பின் பும்ரா அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். சில போட்டிகளில் தன் பழைய ஆட்டத்தைக் காட்டினாலும், சில போட்டிகளில் சொதப்பி வருகிறார். இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அவரை குறி வைத்து தாக்கியது.

ஒருநாள் தொடர் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடை பெற்றது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் களமிறங்கியது இந்திய அணி.

273 ரன்கள் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து அபாரமாக ரன் குவித்து வந்தது. மத்திய ஓவர்களில் இந்திய அணியில் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்தனர். எனினும், சமாளித்து இறுதியில் 273 ரன்கள் குவித்தது நியூசிலாந்து.

மார்டின் கப்தில் அதிரடி நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்டின் கப்தில் அபாரமாக ஆடி 79 ரன்கள் குவித்தார். இவர் துவக்கத்தில் பும்ரா பந்துவீச்சை அடித்து ரன் குவித்தார். அடுத்து மிடில் ஆற்றில் ஆடிய ராஸ் டெய்லரும் அதிரடி ஆட்டம் ஆடினார்.

ராஸ் டெய்லர் ரன் குவிப்பு ராஸ் டெய்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 73 ரன்கள் குவித்தார். ராஸ் டெய்லருடன் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேமிசன் 25 ரன்கள் குவித்து அணிக்கு உதவினார். இவர்கள இருவரும் கடைசி ஓவர்களில் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் அதிரடியாக ரன் குவித்தனர்.

அதிக ரன்கள் கொடுத்த பும்ரா இந்திய அணியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தது பும்ரா தான். மேலும், அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 10 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்து இருந்தார் பும்ரா. அவருக்கு அடுத்த இடத்தில் ஷர்துல் தாக்குர் 10 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்து இருந்தார்.

பந்துவீச்சு தாக்கம் இல்லை முதல் ஒருநாள் போட்டியில் பும்ரா சிறப்பாக பந்து வீசி இருந்தார். ஆனால், விக்கெட் வீழ்த்தவில்லை. அதே போல, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் சில போட்டிகளில் துல்லியமாக பந்து வீசி ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினார். ஆனால், சில போட்டிகளில் அவரது பந்துவீச்சு தாக்கம் ஏற்படுத்தவில்லை.

குறி வைத்த நியூசிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டியும் அதே போலத் தான் அமைந்தது. பும்ரா பந்துவீச்சை நியூசிலாந்து வீரர்கள் குறி வைத்து தாக்கியது தான் இதில் அதிர்ச்சி அளித்தது. நவ்தீப் சைனி மற்றும் ஷர்துல் தாக்குர் ஓவர்களில் கூட முதலில் அவர்கள் அடக்கி வாசித்தனர்.

ஐந்து போட்டிகள் ஆனால், பும்ரா ஓவர்களில் மிக எளிதாக ரன் குவித்தனர். இந்த நிலையில், பும்ரா குறித்த புள்ளி விவரம் ஒன்று கவலை அளிப்பதாக உள்ளது. காயத்திற்கு பின் பும்ரா இதுவரை ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர், நியூசிலாந்து ஒருநாள் தொடரில் மொத்தமாக ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

மோசமான நிலை அந்த ஐந்து போட்டிகளில் பும்ரா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார். மேலும், அவரது பந்துவீச்சு சராசரி 237, ஸ்ட்ரைக் ரேட் 277 ஆகும். விக்கெட் வீழ்த்தாத காரணத்தால் அவரது சராசரி படு மோசமான நிலையில் உள்ளது. அவரது எகானமி 5.13 ஆகும்.

கவலை மேலும், தொடர்ந்து மூன்று போட்டிகளில் பும்ரா விக்கெட் எடுக்காமல் ஆடி வருகிறார். இதுவரை பும்ரா மூன்று போட்டிகளில் தொடர்ந்து விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது இல்லை. பும்ரா தன் மோசமான நிலையில் இருக்கிறார் என்பது கண்கூடாக தெரிகிறது. அவர் விரைவில் தன் சிறப்பான நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*