;
Athirady Tamil News

வவுனியா பிரதேச செயலகத்தில் இணைய வசதிகள் சீரின்மை : மக்கள் அவதி!! (படங்கள்)

0

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (10.02.2020) காலை தொடக்கம் மாலை வரை இணைய வசதிகள் வேலை செய்யாமையினால் பொதுமக்கள் பல்வேறு அசோகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

வவுனியா பிரதேச செயலகத்தில் பதிவாளர் பிரிவில் இணைய வசதிகள் சீரான முறையில் செயற்படாமையினால் பிறப்பு , இறப்பு , திருமண சான்றிதழ்கள் பெற வருகை தந்திருந்த மக்கள் திரும்பி அனுப்பட்டனர்.

நீண்ட தூரத்திலிருந்து மிகுந்த வருகை தந்திருந்த மக்கள் ஏமாற்றதுடன் திரும்பிச் சென்று வவுனியா மாவட்ட செயலகத்தில் பிறப்பு , இறப்பு , திருமண சான்றிதழ்கள் போன்றவற்றினை பெற்றிருந்தனர்.

எனினும் பிரதேச செயலகத்தில் இணைய வசதி பிரச்சனை காரணமாக வவுனியா மாவட்ட செயலக காணிக்கிளையில் பாரிய மக்கள் குவிந்து நின்றதினை அவதானிக்க முடிந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − one =

*