;
Athirady Tamil News

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி நாற்காலிக்கான கூட்டாகும் – சட்டத்தரணி சுகாஷ்!! (வீடியோ)

0

முன்னாள் முதலமைசர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒரு நாற்காலிக்கான கூட்டேயாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி யானது ஒரு நாற்காலி காண கூட்டணியை அன்றி தமிழ் மக்களின் கொள்கையோடு சம்பந்தப்பட்ட கூட்டணி அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு கூட்டணி ஆகவே தாங்கள் அதனைப் பார்க்கின்றோம்.

இந்த கூட்டணியுள்ள நான்கு கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் நாலா திசைக்கும் பிரிந்து சென்றுவிடும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சில நாள்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் இணைந்து ஒரு கூட்டாக தம்மை மாற்றுத் தலைமை என்று கூறிக்கொள்வது வெட்கமாக உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிகரான ஒரு மாற்றுத் தலைமை ஆயின் அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான்” என்று சட்டத்தரணி கே.சுகாஷ் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

கிடைப்பதை சுருட்ட அரசியலுக்கு வந்தவர்களே கூட்டமைப்பினர்!!

சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிவித்தல்!!

எனது மக்களுடகாக இறுதி வரை பணி செய்வது என்று முடிவு செய்துள்ளேன்!!

விக்னேஸ்வரன் தலைமையின் உருவாகும் புதிய கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!! (படங்கள்)

விக்கியின் கூட்டணியை சாம்பாறு எனச் சாடிய சிறிகாந்தாவும் அந்தக் கூட்டணியில் சங்கமம்!!

கைச்சாத்திடப்படுகின்றது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 6 =

*