;
Athirady Tamil News

கொரோனாவால் 50,000 பேர் இறந்துள்ளனர்! 1200 சடலங்கள் தினம் எரிப்பு… கோடீஸ்வரர் கூறிய அதிரவைக்கும் தகவல்..!!!

0

கொரோனா வைரஸால் சீனாவில் 50,000 பேர் உயிரிழந்துள்ளார்கள் என அந்நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை உலுக்கியுள்ள கொரோனா தாக்கி இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸால் 40,000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சீனாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான Guo Wengui கொரோனா இறப்புகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வசித்து வரும் அவர் கூறுகையில், சீனாவில் கொரோனாவை இறந்தவர்களின் 1200 சடலங்கள் ஒரு நாளைக்கு எரிக்கப்படுகின்றன

அதன்படி பார்த்தால் கொரோனாவால் இதுவரை 50,000 பேர் உயிரிழந்துள்ளனர்.இதோடு உயிர்கொல்லி கொரோனாவால் 1.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சீனா இதை மறைக்கிறது என கூறி அதிரவைத்துள்ளார்.

கோடீஸ்வரர் Guo Wengui சர்ச்சைக்கு பெயர் போனவர் ஆவார்.சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்ட பின்னர் கடந்த 2015ல் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − eleven =

*