;
Athirady Tamil News

நாவிதன்வெளி பிரதேச மக்களது பிரச்சினை குறித்து ஆலோசனை சமர்ப்பிப்பு!! (வீடியோ, படங்கள்)

0

புதிய அரசாங்கம் நாவிதன்வெளி பிரதேச மக்களது அடிப்படை பிரச்சினைகளான குடிநீர்த் ,வீதி அபிவிருத்தி போன்ற குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி ஏகமனதான தீர்மான ம் ஒன்றினை மேறகொண்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை(11) நாவிதன்வெளி பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நாவிதன்வெளி பிரதேசத்தில் காணப்படும் பிரதான குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி உறுப்பினர்களால் பேசப்பட்டதுடன் , எதிர்வரும் காலங்கள் இந்த பிரதேசத்திற்கு உட்பட்ட 20 கிராம சேவையாளர் பிரிவிலும் பிரதானமாக அத்தியாவசிய குடிநீர்த் தட்டுப்பாடுகள் வறட்சியான பகுதியில் நிலவிவருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டது.

இதனை அடிப்படையாக கொண்டு தமது பிரதேசத்து மக்கள் குடிநீரை பெறுவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு பிரதேசசபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்தனர்.மேலும் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் அரசாங்கங்கள் காலா காலத்துக்கும் மாற்றமடைந்து வருகின்றதே தவிர மக்களுக்கான பிரச்சினைகள் மக்கள் அடிப்படை வசதிகள் என்பன தீர்க்கப்படாமல் அவ்வாறு இருந்து வருகின்றது.

அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து புதிதாக பதவியேற்றிருக்கும் அரசாங்கம் நாவிதன்வெளி பிரதேச மக்களது அடிப்படை பிரச்சினைகளான குடிநீர்த் , வீதி அபிவிருத்தி போன்ற குறைபாடுகளை விரைந்து பெற்று தர சனாதிபதி மற்றும் பிரதமருக்கு சபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தையும் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன்போது உறுப்பினர்களது ஆலோசனைகளும் முன்மொழியப்பட்டு தரப்பட்டு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 2 =

*