;
Athirady Tamil News

இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்ற உறுதுணையாக நின்ற டெல்லி மக்களுக்கு நன்றி- பிரசாந்த் கிஷோர்..!!

0

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்திருந்தார்.

இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.

இதனால் ஆம் ஆத்மி தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்தனர். ஆம் ஆத்மி அலுவலகத்தில் திரண்ட அவர்கள் ஆடிப்பாடி சந்தோ‌ஷத்தை வெளிப்படுத்தினர். அதேநேரம் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் ஆட்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பிரசாந்த் கிஷோர்

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்ற உறுதுணையாக நின்ற டெல்லி மக்களுக்கு நன்றி’ என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + thirteen =

*