;
Athirady Tamil News

ஆரணியில் சொத்து தகராறில் அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி..!!!

0

ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சன்ராஜ் மனைவி கிறிஸ்டி (எ) எலிசபெத் (வயது 55). இவருக்கும் அவரது தம்பி லாரி டிரைவர் சந்தோ‌ஷம் (எ) ஐசக் என்பவருக்கும் கடந்த பல வருடங்களாக சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.

தாயாரின் உதவி தொகை மாதம் மாதம் கொடுக்க வேண்டும் என்று எலிசபெத்திடம் பலமுறை ஐசக் தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் ஐசக் அக்கா வீட்டிற்கு சென்று சொத்தை பிரித்து தருமாறு கேட்டு சண்டை போட்டார்.

அப்போது எலிச பெத்துக்கும் ஐசக்குக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஐசக் மறைத்து வைத்திருந்த கத்தியால் எலிசபெத் கழுத்தில் பலமாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் எலிசபெத் சரிந்தார்.

இதையடுத்து ஐசக் தப்பியோடி விட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் எலிசபெத்தை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். இதனையடுத்து ஐசக் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இது சம்பந்தமாக ஆரணி நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*