;
Athirady Tamil News

மோசமான புயலில் சிக்கிய குழந்தை: தெருவில் அடித்து செல்லப்படுவதை பார்த்து கூச்சலிட்ட மக்கள்..!!!

0

பிரித்தானியாவின் பல பகுதிகளில் நேற்று கடுமையாக தாக்கிய சியாரா புயலில், குழந்தை ஒன்று தெருவில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சியாரா புயலானது நேற்று வெறும் 24 மணி நேரத்தில் ஒன்றரை மாத மழையை கொண்டுவந்தது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மணிக்கு 90கிமீ வேகத்தில் காற்று வீசியது.

இந்த மோசமான வானிலையின் போது லங்காஷயரின் பிளாக்பூல் பகுதியில் நேற்று மதியம் 12.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) தந்தையுடன் வெளியில் வந்திருந்த ஒரு குழந்தை தெருவில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனை பார்த்ததும் அங்கிருந்த பாதசாரிகளில் சிலர் கூச்சலிட ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் குழந்தையின் தந்தை வேகமாக ஓடிச்சென்று குழந்தையை மீட்டுள்ளார்

ந்த வீடியோ காட்சியானது அங்கிருந்த ஒருவரால் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டது. இதனை பார்த்த பலரும் குழந்தையின் பெற்றோரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

இதுபோன்ற சமயங்களில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வது முட்டாள்தனமானது எனவும் தெரிவிக்கின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*