;
Athirady Tamil News

அம்பாறை மாவட்டதில் கடலில் ஏற்பட்டுள்ள திடிர் மாற்றம் – மீன் பிடி குறைவு!! (வீடியோ, படங்கள்)

0

அம்பாறை மாவட்டதில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளது .

கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடார்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடந்த சில வாரங்களாக கரயோர பிரதேசத்தில் வீசிவரும் காற்றின் வேகத்தின் அதிகரிப்பினாலும் இ நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனாலும் இ தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி வாழ்வை நடார்திவரும் மீனவ்ர்கள் மீன்பிடி குறைந்த்துள்ள காரணத்தால் மூலதனத்தை செலவுசெய்து கடலுக்கு சென்று வெறும் கையோடு வீடு செல்ல நேரிடுவதாக குறிப்பிட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + eleven =

*