;
Athirady Tamil News

மனைவிக்காக தன் உயிரையே தியாகம் செய்ய தயாரான கணவன்: மருத்துவமனையில் கவலைக்கிடம்..!!!

0

ஐக்கிய அமீரகத்தில் தீ விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் தம்பதியினரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.கேரளாவை சேர்ந்த அனில் நினன் (32 என்பவர்), தனது மனைவி நீனு உடன் ஐக்கிய அமீரகத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று அவர்களுடைய வீட்டின் மின்சாரப் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் படுக்கையறையில் இருந்த அனில், மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்துள்ளார்.மனைவியை காப்பாற்ற முயன்றபோது தீ பிழம்புகள் முழுவதும் அவர் மீது பாய்ந்துள்ளது

இதில் பலத்த காயமடைந்த அனில் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவனையில் உயிருக்கு போராடுவதாகவும், அவருடைய மனைவி 10 சதவீத தீக்காயங்களுடன் நல்ல நிலையில் இருப்பதாகவும் நெருக்கமான உறவினரான ஜூலை, பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

இந்த நிலையில் தம்பதியினர் இருவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*