;
Athirady Tamil News

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தடை: உடம்பில் பெட்ரோல் ஊற்றிக்கொண்ட சீனர்..!!

0

தென்மேற்கு சீனாவில் குடியிருக்கும் நபர் தமது பிறந்தநாள் விருந்தை அதிகாரிகளால் தடை செய்ததை அடுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வெளியாகியுள்ளது.கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவின் பெரும்பாலான நகரங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

சீனாவின் மத்தியப்பகுதியில் அமைந்துள்ள வுஹான் நகரில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், ஒட்டுமொத்த சீனாவிலும் கடுமையான கட்டுப்பாடுகளை அங்குள்ள அரசாங்கம் விதித்துள்ளது.

இந்த நிலையில் தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் குடியிருக்கும் 59 வயதான நபர் தமது பிறந்தநாளை நெருங்கிய நண்பர்கள் சிலருடன் கொண்டாட முடிவு செய்துள்ளார்.

இதற்கென உணவகம் ஒன்றில் 10 மேஜைகளை முன்பதிவும் செய்துள்ளார். ஆனால் நகர அதிகாரிகள் குறித்த பிறந்தநாள் விருந்தை ரத்து செய்யுமாறு அந்த 59 வயது நபரை கோரியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்த நபருக்கு ஆத்திரத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கிராம அலுவலகம் முன்பு சென்ற அவர், பட்டாசுகளை தமது உடபில் கட்டிவிட்டு, பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் அதிகாரிகள் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சீனா முழுவதும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில், சுமார் 46,500 பேர் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சையில் உள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 8 =

*