;
Athirady Tamil News

கொரோனா வைரஸ் தாக்குதல் – ஜப்பானில் முதல் மரணம்…!!

0

சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ தாண்டியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்தார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் சீனாவை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 2 =

*