;
Athirady Tamil News

இங்கிலாந்து நாட்டின் நிதி மந்திரியானார் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன்..!!

0

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் (39) . இந்திய வம்சாவளியான ரிஷி இங்கிலாந்து நாட்டின் யார்க்‌ஷிரி மாகாணத்தில் உள்ள ரிஷ்மவுண்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராவார். இவருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் முடிந்தது.

ரிஷி சுனக் இங்கிலாந்தில் தற்போது ஆட்சியில் உள்ள பழமைவாத கட்சியின் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசின் நிதித்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்துவந்தார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்துமுடிந்த தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சி வெற்றி பெற்ற போது நாட்டின் அப்போதைய நிதி மந்திரியாக இருந்த சஜீத் ஜாவித் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் நிதிமந்திரி பதவி காலியாக இருந்தது.

மகளின் திருமண நிகழ்ச்சியில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி

இந்நிலையில், போரிஸ் ஜான்சன் தனது அமைச்சரவையில் இன்று புதிய மாற்றங்களை அறிவித்தார். அதில் ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்து நாட்டின் நிதிமந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பிரதமருக்கு அடுத்த நிலையில் மிகவும் சக்திவாந்த பதவியாக கருதப்படும் நாட்டின் நிதிமந்திரி பதவி இந்திய வம்சாவளியும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷிக்கு வழங்கப்பட்டுள்ளது இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*