;
Athirady Tamil News

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் மாதம் 06,07..!! (படங்கள்)

0

வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் மாதம் 06,07 ஆகிய திகதிகளில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பீரதீபன் தெரிவித்தார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் முன்னேற்பாடுகள் தொடர்பாக உயர் மட்டக்கலந்துறையாடல் நேற்று(14) யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பீரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இவ் உயர் மட்டக்கலந்துரையாடலில் இரண்டு நாளுக்கான பக்தர்கள் தங்குமிடவசதிகள்,சுற்றாடல் மேன்பாடுகள்,படகுச்சேவைகள்,உணவுகள்,பொலிஸார், இராணுவ,கடற்படை ஆகியோர்களின் கடமைப் பொறுப்புகள்,தென்இந்திய,இலங்கை ஆகிய பக்தர்களின் ஒழுங்கமைப்புகள்,மலசலகூட வசதிகள்,மருத்துவ சேவைகள்,போன்ற பல்வேறு துறைகள் சார்பாக கலந்துரையாடப்பட்டன.

இதன் போது கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பீரதீபன் இதன் ஊடாக தரைவழிமார்க்கமாக 6ம் திகதி காலை 06 மணியில் இருந்து 10 வரையும் போக்குவரத்து வசதிகளும்,செய்யப்பட்டுள்ளது..

குறிகட்டுவானில் இருந்து கச்சதீவுக்கு ஒருவழிக்கட்டணமாக 325 ரூபாவும், நெடுந்தீவு தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒருவழிமார்க்கமாக 250 ரூபாவும், அறவிடப்படும் என தெரிவித்தார்.இதில் இந்தியாவில் இருந்து 3000பேர்கள் உடைய பக்தர்களும்,இலங்கையில் இருந்து 7000 பேர்கள் உடைய பக்தர்களும், மொத்தமாக 10000 பேர்கள் கலந்துகொள்ளுவர்கள் என தெரிவித்தார்.

இதில் நயினாதீவில் இருந்து 20 படகுச்சேவைகளும்,நெடுந்தீவில் 04 படகுச் சேவைகளும், ஊர்காவற்துறையில் இருந்து 07 படகுச்சேவைகளும் மொத்தமாக 31 படகுச்சேவைகள் புனித கச்சதீவு அந்தோணியார் ஆலயத்திற்கு பக்தர்களை எற்றி இறக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை விட எனைய சிறிய ரக படகுகளில் செல்லுவர்கள் இருந்தாலும் அதனை உரிய பிரதேச செயலங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் சந்திப்பில் யாழ் மறைமாவட்ட பங்கு குருமுதல்வர் கலாநிதி nஐயபரட்ணம் எ.யாழ் இந்திய உதவித்தூதரகத்தின் துணைநிலை மேலதிக செயலாளர் ஏ.கிருஸ்ணமுர்த்தி,மற்றும் கடற்படையினர்கள்,பொலிஸார்,போக்குவரத்து அதிகாரிகள்,படகு உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்,சுற்றுலாத்துறையினர் சுங்கத்திணைகள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*