;
Athirady Tamil News

இராணுவ தளபதிக்கு அமெரிக்க பயணத் தடை; இலங்கை அரசு கடும் ஆட்சேபனை!!

0

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைக்கு இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. எனவே பயணத் தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு இலங்கை அரசாங்கம் பகிரங்க வேண்டுகோளையும் விடுத்துள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சிரேஸ்ட நிலையை கருத்தில்கொண்டே சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இலங்கை இராணுவத்தில் உள்ளவர்களில் சிரேஷ்ட நிலையில் இவர் உள்ளதாலேயே சவேந்திர சில்வாவுக்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவ பிரதானி பதவியை வழங்கினார். அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நிரூபிக்கப்பட்ட வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை.

தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட ஒருவரை, பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நியமிப்பதை சர்வதேச அரசாங்கம் கேள்விகளுக்குட்படுத்துவது ஏமாற்றமளிக்கும் விடயம்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பான நம்பகத்தன்மையை ஆராய்ந்து தமது தீர்மானத்தை ஆராய்ந்து அமெரிக்கா மீள்பரிசீலைனைக்குட்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கானபயணத்தடையை அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் விதித்துள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டாரென்ற நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ளன. 2009ஆம் ஆண்டு இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில் வெளிநாட்டு அதிகாரியொருவர் பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் கிடைத்தால் அந்த நபரும் அவருடைய குடும்பத்தவர்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்கள்.

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக தடை விதிப்பதற்கு அப்பால் அவருடைய குடும்பத்தவர்களுக்கு எதிராகவும் பயணதடை விதிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளும் ஏனைய அமைப்புகளும் முன்வைத்துள்ள, ஆவணப்படுத்தியுள்ள சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை மிக்கவை” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற படுகொலைகளுடன் சவேந்திர சில்வாவுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது இடம்பெற்ற படுகொலைகளுடன் இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு தொடர்புகள் உள்ளதன் காரணமாகவே அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அவர் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

இராணுவத் தளபதிக்கு அமெரிக்க விதித்துள்ள தடை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 2 =

*