;
Athirady Tamil News

ஹட்டன் வெலிஓயா தோட்டத்தில் 50 தனி வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு!! (படங்கள்)

0

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மானிக்கப்படவுள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் இல்லாத தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு வீடமைப்பதற்காக சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (15) திகதி இடம்பெற்றன.

குறித்த வீடுகள் ஏழு பேச்சஸ் காணியில் ஒரு வரவேற்பறை, இரண்டு படுக்கை அறைகள்,சமயலறை,குளியலறை,மலசலகூட வசதிகளுடன் ,மின்சாரம்,போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளுடன் அங்க சம்பூரணமான சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இதே வேளை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைத்தில் அமைக்கப்படவுள்ள கேட்போர் கூடத்திற்கும் இதன் போது அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன,முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன்,ஊவா ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான, கணபதி கணகராஜ், பிலிப்குமார், சத்திவேல், இளைஞர் அணித்தலைவர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் முக்கியஸத்தர்கள் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*