;
Athirady Tamil News

குற்றச் செயல்களுக்கு நாம் துணைபோக மாட்டோம் : யாழ்.பல்கலைக்கழக மாணவர்!!

0

பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் புதுமுக மாணவர்களுக்கு, பகிடிவதை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் செயற்பாடுகள் மிக அவசியமானவை.

இது பகிடிவதை அல்ல பாலியல் துன்புறுத்தல். தனி நபர் இதை சிந்தித்து செயற்பட வேண்டும். அண்மையில் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லுயிஸ் அருளானந்தம் அனுசன் வழங்கிய நேர்காணல்…

கேள்வி: அண்மையில் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கும் கிளிநொச்சி வளாக பகிடிவதை சம்பந்தமாக ஒரு கண்டனத்தையும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுக்காதது ஏன்?

புதில்:- விசாரணை அறிக்கைகள் முழுமையாக வெளிவந்த பின்னர் தான் நாங்கள் அறிக்கை விட முடியும். நாங்கள் அறிக்கை விட்டதன் பின்னர், விசாரணை அறிக்கை முரண்பாடாக வெளிவந்தால், அதற்கு நாங்கள் தான் பொறுப்பாளிகளாக இருக்க வேண்டும். விசாரணைகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் தான் அதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக காத்திருந்தோம்.

கேள்வி:- பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே நட்புறவைப் பேண பகிடிவதை செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், உண்மையில், ஆதிக்க மனோபாவம் கொண்ட சமூகத்தையே இது உற்பத்தி செய்கின்றது என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றதே?

பதில்:- பகிடிவதை என்பது பல்வேறு வழிகளில் உள்ளன. அண்மைக்காலத்தில் நடைபெற்ற பகிடிவதையை பாலியல் துன்புறுத்தலாகவே நாங்கள் பார்க்கின்றோம். சமூகமும் அவ்வாறே பாரக்கின்றது. பாலியல் துன்புறுத்தல்களை கடுமையாகவே பார்க்கின்றோம். அதற்கான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

கேள்வி:- பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை இல்லாமல் செய்ய மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்பு எவ்வாறாக அமைய முடியும்?

பதில்:- யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் புகு முக மாணவர்களுக்கு, பகிடிவதை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மற்றும் செயற்பாடுகளை அந்த மாணவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில், நாடகங்கள் மற்றும் பதாதைகள் ஊடாக ஏற்படுத்த வேண்டும்.

இதனூடாக மாத்திரமே மாணவர்களுக்கான விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடின், பகிடிவதை தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

கேள்வி:- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையா?

பதில்:- இவ்வாறான ஒரு சம்பவத்தின் பின்னர், நாங்கள் எல்லோரையும் குற்றம் சாட்ட முடியாது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில், இந்த பகிடிவதை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள். பல்கலைக்கழகம் செய்யவில்லையா, மாணவர் ஒன்றியம் செய்யவில்லையா என்பதை விட, ஒரு தனிப்பட்ட மனிதன் உணர்ந்தாலே, பகிடிவதை (ராக்கிங்) இல்லாமல் ஒழிக்கப்பட்டுவிடும்.

கேள்வி:- பகிடிவதை தொடர்பாக அரசாங்கத்தினால், தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் எவ்வாறாக அமையும். அரசின் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத்தயாரா?

பதில்: மாணவர் ஒன்றியத்தினராகிய நாமும் பகிடி வதைக்கு எதிராகத்தான் குரல் கொடுப்போம். எமது சமூகத்தில் நிலவும் பல சீரழிவுகளுக்கு இந்த பகிடிவதை காரணம் எனச் சொல்லும்போது, அதற்கு ஆதரவாக நாங்கள் நிற்க முடியாது. பகிடிவதைக்கு எதிராகவே எப்போதும் நிற்போம். அந்த முடிவில் இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பின்நிற்காது.

கேள்வி: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழ் மக்களிடையே மிகப் பெரிய ஒரு அங்கீகாரத்தையும், வரலாற்றையும் கொண்ட ஒரு கட்டமைப்பை உடையது. ஆனால், அண்மைய சம்பவம், பல்கலைக்கழகத்திற்கு ஒரு இழுக்கை ஏற்படுத்தியதுடன், மாணவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்ற ஒரு தோற்றப்பாட்டையும் உருவாக்கியுள்ளது. இதனை முறியடிக்க, மாணவர் ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறாக அமைய உள்ளது.?

புதில்:- இந்த சம்பவத்தின் பின்னர், எதிர்வரும் காலங்களில், புகுமுக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழையவுள்ளனர் எனின், அவர்களுக்கான, தெளிவூட்டல்கள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்த வேண்டும்.

“இரண்டாம் வருட மாணவன் எனக்கு இப்படி செய்திட்டான், நான், இரண்டாம் வருடத்திற்கு செல்லும் போது, இவ்வாறு வேறு ஒருவருக்கு செய்ய வேண்டும் என்ற மனநிலையை மாற்ற வேண்டும். அந்த சிந்தனையில் இருந்து அவர் விடுபட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளைத் தான், யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகமும் சரி, மாணவர் ஒன்றியமும் சரி எடுக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளைச் செய்யத் தவறினால், பகிடிவதைகள் (ராக்கிங்) தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும்.

கேள்வி:- கடந்த காலங்களில் பகிடிவதை தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டங்களை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கவில்லையா?

புதில்: பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவூட்டல்களை வழங்கிக்கொண்டு தான் இருக்கின்றது. தனிப்பட்ட நபர் தனது அபிப்பிராயத்தை (மனதை) மாற்றிக்கொள்ளாத வரைக்கும், பகிடிவதை (ராக்கிங்) மாறப்போறதில்லை.

கேள்வி:- மாணவர்கள் தவறு செய்யும் போது, பேராசிரியர்கள் அல்லது விரிவுரையாளர்கள் மீது, அழுத்தங்களை பிரயோகிப்பதும், அவர்களின் தவறை வெளிப்படுத்துவதாக அச்சுறுத்தல் விடுவதும், நடைபெறுகின்றதா? ஏன் அவ்வாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன?

பதில்: தவறு யார் செய்தாலும், அதை சுட்டிக் காட்ட வேண்டும். விரிவுரையாளர்கள் தவறு செய்தால், மாணவர்கள் சுட்டிக் காட்டலாம். மாணவர்கள் தவறு செய்தால், விரிவுரையாளர்கள் சுட்டிக் காட்டலாம். இதில், எந்த மாற்றுக் கருத்திற்கும் இடமளிக்க முடியாது.

கேள்வி:- யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட இந்த அவப் பெயரை மாற்றியமைக்க யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சார்பாக, எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளீர்கள்?

புதில்: புகுமுக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் போது, அவர்களுக்கான தெளிவூட்டல்கள் மற்றும், அவர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை முறையிடுவதற்கு என ஒரு முறைப்பாடு அலகு ஒன்றை நிர்மாணிக்கவுள்ளதுடன், ஒவ்வொரு மாணவர்களுக்கும் இதைப் பற்றி தெளிவான விழிப்புணர்வை வழங்கினால் மாத்திரமே, உடனடியாக மாற்ற முடியாவிட்டாலும், காலப் போக்கில், இந்த பகிடிவதை (ராக்கிங்கை ) இல்லாது ஒழிக்கலாம்.

பகிடிவதை செய்தார்கள் என குற்றம்சாட்டப்பட்ட மாணவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அந்த தண்டனைக்கு எதிராக, மாணவர் ஒன்றியம் ஒரு நாளும் கருத்துக்களை வெளியிடாது என்பதுடன், குற்றங்களுக்கும் துணை போகாது.

கேள்வி:- பல்கலைக்கழக நிர்வாகம் இந்த சம்பவம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதா, மாணவர் ஒன்றியத்தின் அபிப்பிராயங்களை கேட்டறிந்துள்ளனரா?

புதில்: பல்கலைக்கழக நிர்வாகத்தினர் எம்முடன் கலந்துரையாடியுள்ளனர். இது ஒரு பாரதூரமான விடயம் என்பதனாலும், விசாரணை முழுமையாக முடிவடையாத நிலையில் எந்த விடயங்களும் அறிவிக்கப்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், விசாரணை அறிக்கை வரும்வரையில் காத்திருக்கின்றோம்.

கேள்வி:- அண்மையில் இடம்பெற்ற தலைக்குனிவு பற்றி…..

புதில்:- ஒரு சிலரின் தவறுகளை, முழு பல்கலைக்கழகமும் செய்துள்ளதென கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவர், இருவர் செய்யும் தவறுக்காக, ஒட்டுமொத்த மாணவர்களையும் குற்றம்சாட்டுவது தவறான விடயம்.

கேள்வி: மாவீரர் தின அனுஸ்டிப்பு தடை அல்லது அரசியல் விடயங்கள் என்பவற்றுக்கு உடனடியாக களமிறங்கும் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு, மாணவர்களின் பிரச்சினைகளுக்காக களமிறங்காததன் பின்னணி என்ன?

பதில்:- உண்மைத் தன்மையின்றி, ஏதாவது ஒரு செய்தியை வெளியிடுவது மிகத் தவறான விடயம். விசாரணைகளின் பின்னர்தான், அவர்கள் குற்றவாளிகளா, சுற்றவாளிகளா என்பது தெரியவரும். அதுவரைக்கும் எந்தவிதமான கருத்துக்களையும் கூற முடியாது. சிலவேளைகளில் குற்றங்கள் நடந்திருக்கலாம், நடக்காமல் இருந்தும் இருக்கலாம். விசாரணை முடிந்த பின்னர் தான் எந்த கருத்துக்களையும் கூற முடியும் என்பதற்காக மெளனமாக இருந்தோம்.

கேள்வி:- எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கான உத்திகளை கையாள்வதற்கு எவ்வாறான செய்திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளீர்கள்.

புதில்:- இது மிகப் பாரதூரமான விடயம். பகிடிவதை தொடர்பாக முறைப்பாடுகளை அல்லது, தெரியப்படுத்த, பல்கலைக்கழகத்தில் உள்ள பீடங்களின் மாணவ ஒன்றியத்தின் தலைவர்களுடன், கலந்துரையாடியுள்ளோம். அந்த மாணவ தலைவர்கள் ஊடாக அறிவித்தால், உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்து, அதற்குரிய நடவடிக்கைகளை கையாள்வதற்கும் தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் இவ்வாாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்கு அனைத்துப் பீட மாணவ ஒன்றியத்தினருடனும் கலந்தாலோசித்து வருகின்றோம். அதற்கான முடிவுகள் மிக விரைவில் எட்டப்படும்
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

பகிடிவதை விவகாரம்; அலைபேசி இலக்கங்களின் தரவுகளைப் பெற நீதிமன்றம் அனுமதி!!

யாழ். பல்கலையில் மீண்டும் பகிடிவதை – விசாரணை செய்த அதிகாரிக்கு மிரட்டல்!!

பகிடிவதை தாக்குதல்; ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியது ஆவா குழு!!!

பகிடிவதைக் குற்றச்சாட்டு; மாணவன் வீட்டில் தாக்குதல்!!

ஒழுக்கமற்ற பட்டதாரி பரம்பரையையும் உருவாக்கும் பல்கலைக்கழகங்கள்!! (கட்டுரை)

பகடி வதை: 2ஆவது மாணவருக்கும் இடைக்காலத் தடை!! (வீடியோ)

கிளிநொச்சி தொழில்நுட்பபீடத்தில் கிடுக்குப்பிடி விசாரணை… 8 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை!!

பகிடிவதைக்கு நடவடிக்கை எடுக்க ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்பு!!

மாணவன் ஒருவருக்கு பல்கலை. வளாகங்களுக்குள் நுழைய இடைக்காலத்தடை!! (வீடியோ)

பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு.!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 6 =

*