;
Athirady Tamil News

இராணுவத் தளபதிக்கு எதிரான அமெரிக்காவின் தடை துரதிஷ்டமானது – எதிர்க்கட்சி தலைவர்!!

0

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா பயணத் தடைவிதித்துள்ளமை துரதிஷ்டவசமானதும் வருந்தத்தக்கதுமான விடயமென என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பிலேயே சஜித் பிரேமதாச அவருடைய உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் இவ்வாறாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எதிராக பயணத்தடைவிதித்தள்ளமை துரதிஸ்டவசமானதும் வருந்தத்தக்கதுமான செயலுமாகும். அந்த வகையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக தலைமை தாங்கிய தளபதிகளில் இவரும் ஒருவர்.

இந்த வகையில் அவருக்கு இக்கட்டான இந்த சூழ்நிலையில் அவருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் ஆதரவாக நாம் இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாடு என்ற வகையில் 30 ஆண்டு கால பயங்கரவாத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த போர் வீரர்களுடன் நாம் எப்பொழுதும் ஆதரவாக நிற்போம் என அவர் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தூதுவர் கலந்துரையாடலின் பின் வௌிவிவகார அமைச்சில் இருந்து வௌியேறினார்!!

இராணுவ தளபதிக்கு அமெரிக்க பயணத் தடை; இலங்கை அரசு கடும் ஆட்சேபனை!!

இராணுவத் தளபதிக்கு அமெரிக்க விதித்துள்ள தடை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 11 =

*