;
Athirady Tamil News

சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?..!!

0

சீனாவின் ஹுபே மாகாணத்தில் இருக்கும் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களிடம் பரவ துவங்கியது.

இந்த நோய் தற்போது நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இந்த கொடிய நோய் 1500-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. சீனா மட்டுமின்றி உலகின் 30 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இருப்பதால், அதை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 1631 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிர்கொல்லி வைரஸால் 67,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து இந்தியா வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த 17 பேரும் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டு இருப்பதாக சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − eight =

*