;
Athirady Tamil News

63 அடி உயர தீனதயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!!

0

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியாகும். பிரதமர் மோடி வரும் 16-ம் தேதி வாரணாசிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டு உள்ள தீனதயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மேலும், அங்கு நிறுவப்பட்டுள்ள தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர பஞ்ச லோக சிலையை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, 30க்கு மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 9 =

*