;
Athirady Tamil News

பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்ததில் 4 மாணவர்கள் பலி – பஞ்சாப்பில் சோகம்..!!

0

பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. நேற்று பள்ளிக்கூடம் முடிந்ததும் 12 மாணவ, மாணவிகள் வேனில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

வழியில் திடீரென அந்த வேன் தீப்பிடித்து எரிந்தது. வேனில் உள்ளே அமர்ந்து இருந்த குழந்தைகள் தங்களை காப்பாற்றும்படி அலறினர்.
உடனடியாக வேனை நிறுத்திய டிரைவர் கதவைத் திறக்க முயன்றும் முடியவில்லை.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்றனர். தீயை அணைத்து மாணவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால், இந்த விபத்தில் 4 மாணவர்கள் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் 10 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாணவர்கள் பலியானதற்கு முதல் மந்திரி அமரிந்தர் சிங் இரங்கல் தெரிவித்தார். மேலும்,
விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அமரிந்தர் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இது சோகமான சம்பவம். இதற்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + two =

*