;
Athirady Tamil News

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை!!!

0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அவரை இன்று காலை முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போலி உறுதிப்பத்திரத்தைத் தயாரித்து தலைமன்னார் பகுதியில் 2 காணிகளை விற்பனை செய்த மோசடியில் ரிப்கான் பதியுதீன் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இன்றுவரை வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது சட்டத்தரணி பிணை கோரிக்கையை முன்வைத்திருந்ததன் அடிப்படையில் தற்போது நீதிமன்றம் பிணையில் அவரை விடுவித்துள்ளது.

இதேவேளை ரிப்கான் பதியுதீன், முறைப்பாட்டாளர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இந்த விடயத்துடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல் தொடர்பான அறிக்கையை பெற்று விசாரணைகளை முன்னெடுப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + four =

*