;
Athirady Tamil News

தேயிலை ஏற்றுமதியில் கூடுதல் வருமானம்- ஹேரத்!!

0

தேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி ஊடாக 240.6 பில்லியன் ரூபா வருமானமாக காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த வருமானம் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத அதிகரிப்பாகும் என தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − twelve =

*