;
Athirady Tamil News

தாக்குதல் விசாரணை திருப்திப்படும் வகையில் இல்லை – பேராயர்!!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை திருப்திப்படும் வகையில் இல்லை என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான ஒவ்வொரு விடயங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு என சுட்டிக்காட்டிய கொழும்பு பேராயர், அந்த உரிமையை தலைவர்கள் நிலைநாட்டுவார்கள் என எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் பதிவாகியுள்ள விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தமக்கு எண்ணம் ஏற்பட்டுள்ளதாகவும் பேராயர் தெரிவித்தார்.

ஆணைக்குழு தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைந்தாலும், பாதுகாப்புத் தரப்பினர் இது தொடர்பில் உரிய முறையில் செயற்படுகின்றனரா என்பதை அறியமுடியவில்லை என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த யாழ் யுவதியின் இறுதிக்கிரியை இன்று!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்!!! (படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மனைவியை இழந்த பிறகும் இலங்கையை கைவிடாத அமெரிக்கர்!!

10 பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு!! (வீடியோ)

பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*