;
Athirady Tamil News

கள்ளத் காதல் காரணமாக தாய் கொலை !!

0

லுணுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலேகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

லுணுகல, கிவுலேகம பகுதியை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மற்றுமொரு பெண் காயங்களுக்கு உள்ளதாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ள காதல் சம்பவம் தொடர்பில் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 53 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (18) மாலை குறித்த பெண் தனது மகளுடன் வயலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதிக்கு வந்த சந்தேக நபர் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது மகளை காப்பற்ற முற்பட்ட தாயின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 43 வயதுடைய மகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் லுணுகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 17 =

*