;
Athirady Tamil News

ஈராக் பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்- மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

0

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஈராக் நாட்டுக்கு இந்தியர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்திருந்தது.

பின்னர் அங்கு நிலைமை மேம்பாடு அடைந்ததை தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது.

இதன்படி பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட 5 மாகாணங்களைத் தவிர்த்து ஈராக் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்யலாம் என கூறியிருந்தது.

இந்நிலையில் அந்நாட்டில் கடந்த மாதம் மீண்டும் பதட்ட நிலை அதிகரித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 8-ந்தேதி மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மறு அறிவிப்பு வரும்வரையில் ஈராக் நாட்டிற்கு தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

அதேநேரம் ஈராக்கில் வசிக்கும் இந்தியர்களுக்கான அனைத்து சேவைகளையும், பாக்தாத் நகரில் இருக்கும் இந்திய தூதரகத்திலும், எர்பில் நகரில் உள்ள துணை தூதரகத்திலும் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணம் குறித்த அறிவிப்பில் மாற்றங்கள் செய்து மத்திய அரசு நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஈராக்கின் நினேவே, சலாஹூதீன், தியாலா, அன்பர், கிர்குக் ஆகிய 5 மாகாணங்களுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.

அந்த நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பயணம் செய்யலாம். இதுகுறித்த தகவல்களுக்கு பாக்தாத் நகரில் இருக்கும் இந்திய தூதரகம், எர்பில் நகரில் உள்ள துணை தூதரகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

மத ரீதியான காரணங்களுக்காக ஈராக் செல்ல விரும்புவோரும் அதற்கான விசா மற்றும் திரும்பி வருவதற்கான பயணச்சீட்டும் வைத்துள்ள இந்தியர்கள் புனித இடங்களான நஜாப் மற்றும் கர்பாலா ஆகியவற்றுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

எனினும், இந்த புனித பயணத்தை ஈராக் நாட்டிற்கு அருகில் உள்ள சிரியாவுக்கு விரிவுபடுத்தக்கூடாது. ஈராக்- சிரியாவுக்கு இடையே சாலை வழிப்பயணங்களையும் மேற்கொள்ளக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + seven =

*