;
Athirady Tamil News

யாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் சமூக அபிவிருத்தி திட்டம்!! (படங்கள்)

0

யாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் பல்வேறு சமூக அபிவிருத்தி திட்டங்களை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு யாழ்ப்பாணத்தில் இன்று (19.02.2020 ) திறந்துவைத்தார்.

இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.ஆனைப்பந்தி மெதடிஸ் மிசன் வித்தியாலயத்தின் நுழைவாயில் வளைவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ். கோப்பாயில் போரால் பாதிப்புற்ற 5 குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 வீடுகள் முற்பகல் கையளிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒரு கோடி ரூபாய் செலவில் உருவான தியாகேந்திரன் கிளினிக் மையம் பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.டி.ஜி.விமலசேன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வாழ்த்துரைகளை சிரேஷ்ட வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி கே.சிவராமன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரம், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.தேவநேசன் ஆகியோர் நிகழ்த்தினர்.

மூத்த ஊடகவியலாளர் நா.வித்தியாதரன் உட்பட சமய தலைவர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 17 =

*