;
Athirady Tamil News

பல்லடம் அருகே பனியன் அதிபர் வீட்டில் தங்க- வைர நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை..!!

0

திருப்பூர் மாவட்டம் பல்லடம்- தாராபுரம் ரோட்டில் உள்ள வளையங்காட்டை சேர்ந்தவர் சுந்தரேசன்(வயது 54). இவரது மனைவி கலையரசி(50). இவர்களுக்கு ஆதிட்(25) என்ற மகன் உள்ளார்.

சுந்தரேசன் அந்த பகுதியில் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு சுந்தரேஸ்வரன் குடும்பத்தினருடன் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் சுந்தரேசனுக்கு ஒரு போன் வந்தது.

இதையடுத்து அவர் போனை எடுத்து கொண்டு வீட்டின் வராண்டாவில் வந்து பேசி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் 3 மர்மநபர்கள் முகமூடி அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். இதை பார்த்த அவர் சத்தம் போட முயன்றார். ஆனால் அதற்குள் அவர்கள் சுந்தரேசனை கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என மிரட்டினர்.

பின்னர் அவரை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். மேலும் தூங்கி கொண்டிருந்த அவரது மனைவியையும் எழுப்பி அவர் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த வைர கம்மல், மோதிரம், செயின் உள்பட 13½ பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் பணத்தையும் கொள்ளையடித்தனர். பின்னர் சுந்தரேசன் மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டிற்குள் போட்டு வெளிபக்கமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து சுந்தரேசன் சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சுந்தரேசனிடம் நடத்திய விசாரணையில் திருட வந்த மர்ம நபர்களில் ஒருவர் இந்தியில் பேசியதாக தெரிவித்தார். எனவே இதில் வடமாநில கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*