;
Athirady Tamil News

“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் “சுவிஸ் தோழர்களால்” கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..! (படங்கள்)

0

“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் “சுவிஸ் தோழர்களால்” கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..! (படங்கள்)

“மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி”, புளொட் செயலதிபர் அமரர் தோழர் உமா மகேஸ்வரன் அவர்களது எழுபத்தைந்தாவது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரின் நினைவாக, அவரின் பாசறையில் வளர்ந்த தோழர்களினால் தாயக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் வவுனியா சாந்தசோலை முனீஸ்வரன் ஆலய முன்றலில் (18.02.2020) நடைபெற்றது நீங்கள் அறிந்ததே.

இதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் காலை, முல்லைத்தீவு உடையார்கட்டு இருட்டுமடு “மகேஸ்வரன் முன்பள்ளி” குழந்தைகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மகத்தான தளபதியும் செயலதிபருமான உமாமேஸ்வரன் அவர்களது எழுபத்தைந்தாவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின தோழர்களினால் உடையார்கட்டு மகேஸ்வரன் முன்பள்ளி மாணவர்களுக்கு தண்ணீர்ப் போத்தல் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது..

முன்னதாக இருட்டுமடு கிராம மகேஸ்வரன் முன்பள்ளிக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு தேவைகள் தொடர்பாக திரு சூரியகுமார் அவர்கள் கேட்டிருந்தார். குறிப்பாக மிகவும் வறிய நிலையில் வாழும் யுத்த பாதிப்பிலிருந்து இன்னமும் மீள முடியாத சூழ்நிலையில் வாழும் குடும்பங்களில் இருந்து வரும் சிறுவர்களே இந்த முன்பள்ளியில் கற்கின்றனர்.

முன்பள்ளியில் தண்ணீர் வசதி இல்லை, மாணவர்களே குடிதண்ணீர் கொண்டு வர வேண்டும்.. இது பல மாணவர்களுக்கு இயலாத நிலை, எனவே இம்மாணவர்களுக்கு குடிதண்ணீர் போத்தலின் அவசியத்தை சூரியகுமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க தண்ணீர் போத்தலும், கற்றல் உபகரணங்களும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இருட்டுமடு கிராமத்து முக்கியஸ்தர் திரு சூரியகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலுடன் முன்பள்ளி ஆசிரியைகள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். தேவையறிந்து உதவிய “புளொட்” சுவிஸ் கிளைத் தோழர்களுக்கு தமது நன்றியை மாணவ செல்வங்களின் சார்பில் பெற்றோர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

மேற்படி நிகழ்வுக்கான, நிதிப் பங்களிப்பை “புளொட்” சுவிஸ்கிளைத் தோழர்கள் ஆனந்தன் (சூரிச்), வரதன் (சூரிச்), தேவண்ணர் (கிளரொஸ்), பாபு (சூரிச்), பிரபா (சூரிச்), செல்வபாலன் (சொலத்தூண்), ரமணன் (செங்காலன்), ரஞ்சன் (ஒபேர்புர்க்) ஆகியோர் வழங்கி இருந்தனர். மேற்படி “புளொட்” சுவிஸ்கிளைத் தோழர்களின் நிதிப் பங்களிப்பில், இன்று மாலை கிளிநொச்சி, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளிலும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் & படங்கள்… திரு.மாணிக்கம்ஜெகன் வவுனியா.

மக்கள் தலைவர் “புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, “சுவிஸ் தோழர்களால்” கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + one =

*