;
Athirady Tamil News

ஜெனிவா தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை ஒப்புதல்!!

0

ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் சபையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இணை அனுசரணையில் இருந்து விலகும் அரசின் தீர்மானத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு கடந்த அரசு இணை அனுசரணை வழங்கியது.

இந்த நிலையில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக அரசு தீர்மானித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்!!

அமெரிக்க தூதுவர் கலந்துரையாடலின் பின் வௌிவிவகார அமைச்சில் இருந்து வௌியேறினார்!!

இராணுவ தளபதிக்கு அமெரிக்க பயணத் தடை; இலங்கை அரசு கடும் ஆட்சேபனை!!

இராணுவத் தளபதிக்கு அமெரிக்க விதித்துள்ள தடை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*