;
Athirady Tamil News

மாத்தறையில் நபரொருவர் படுகொலை!!

0

மாத்தறை, பொல்ஹேன அலுத் மாவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு நீண்டதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், கொலை தொடர்பில் 67 வயதுடைய சந்தேகநபர் மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*