;
Athirady Tamil News

நல்லூர் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின்மனைப் பொருளியல் கண்காட்சி!! (வீடியோ, படங்கள்)

0

வடமாகாணக் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்தப்பட்ட நல்லூர் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக் கலை, மனைப் பொருளியல் கண்காட்சி இன்று வியாழக்கிழமை(20) முற்பகல்- 10 மணி முதல் யாழ்.நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் இயங்கி வரும் நல்லூர் மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் சிறப்புற இடம்பெற்றது.

நல்லூர் பிரதேச செயலர் திருமதி- எழிலரசி அன்ரன் யோகநாயகம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் இடம்பெற்ற விதம் விதமான மணப்பெண் அலங்கார அணிவகுப்பு சபையில் கூடியிருந்த பெருமளவு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

வண்ண வண்ணமான சேலைகளுடன் நேர்த்தியான முறையில் கண்களுக்கு கவர்ச்சியாகத் தங்களை அலங்கரித்த யுவதிகள் மேடையேறி அணிவகுத்த போது சபையில் பலத்த கரகோஷம் எழுந்தது. இதன்போது குறித்த யுவதிகளைப் பயிற்றுவித்த ஆசிரியைகளும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

மணப்பெண் அலங்காரமொன்றுக்காக மணப்பெண் வீட்டாரிடமிருந்து 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபா வரை ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளும் யாழ்ப்பாணத்தின் முன்னணி ஒப்பனையாளர்களுக்கே சவால் விடும் வகையில் குறித்த மணப் பெண் அலங்காரம் காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + fourteen =

*