;
Athirady Tamil News

முழுமையாக திறக்கப்பட்டுள்ளது கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை!!

0

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை தற்போது போக்குவரத்துக்கு முற்று முழுதாக திறந்து விடப்பட்டுள்ளது.

சீதுவ காட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள தீ காரணமாக பரவியுள்ள புகையினால், இன்று பிற்பகலில் அந்த அதிவேகப் பாதையின் கட்டுநாயக்க மற்றும் ஜா-எல பகுதிகளுக்கு இடையிலான பகுதி, தற்காலிகமாக மூடப்படுவதாக, முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அதன் பின்னர் கட்டுநாயக்க மற்றும் ஜா-எல பகுதிகளுக்கு இடையிலான கட்டுநாயக்க அதிவேக வீதி, மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்குமென இன்று பிற்பகலில் அறிவிப்பு வெளியானது.

எனினும், தற்போது கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை முற்று முழுதாக போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 5 =

*