;
Athirady Tamil News

எச்சரிக்கை – கடும் வெப்பம் – அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தல்!!

0

தற்பொழுது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக வயதானவர்கள் நாள் ஒன்றுக்கு 6 லீற்றர் இற்கு மேற்பட்ட நீரை பருக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய் தொடர்பான தேசிய ஆய்வுக்குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் சந்தன ஜெயசுமண இது தொடர்பாக தெரிவிக்கையில், போதுமான அளவு நீரைப்பருகாத சந்தர்ப்பத்தில் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாக கூடும் என்று அவர் தெரிவித்தார்.

காலை 10 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை முடிந்தளவு ஓய்வாக இருக்குமாறும், பகல் வேளையில் பயணிக்கும் போது குடை அல்லது அதற்கு பதிலானவற்றை அணிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இளநீர், பீர்க்கங்காய் மற்றும் தர்ப்பூசணி போன்ற உணவு வகைகளை பெருமளவில் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக அமையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 16 =

*