;
Athirady Tamil News

வீட்டின் மேல்தளத்திலிருந்து சொட்டிய இரத்தம்: அதிர்ச்சியடைந்த இராணுவ வீரர்..!!!!

0

கனடாவில் உள்ள தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற இராணுவ வீரர், சுவர் முழுவதும் இரத்த கறைகள் படிந்திருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த Adam Hockett என்கிற இராணுவ வீரர் கனடாவின் Winnipeg பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

சனிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்ததும் குளிப்பதற்காக தனது குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது மேல்தளத்தில் இருந்து சுவர் வழியாக இரத்தம் வடிந்திருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுபற்றி தெரிவிப்பதற்காக உடனடியாக கட்டிட மேலாண்மை நிறுவனத்தை அழைத்து புகார் கூறியுள்ளார். ஆனால் அதன் மேலாளர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ‘இது என்னுடைய வேலை இல்லை’ என சிரித்துக்கொண்டே போனை துண்டித்துள்ளார்

பின்னர் Adam Hockett குளியலறை முழுவதும் இரத்தக்கறைகள் படிந்திருப்பதை புகைப்படமாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அடுக்குமாடி பராமரிப்பாளருடன் சென்று, மேல்தளத்தில் இருந்தவரின் வீட்டுக்கதவை தட்டி பார்த்துள்ளார்.

ஆனால் எந்த பதிலும் கிடைக்காததால் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்ற போது, தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் அனுப்பி வைத்தனர்

இதுகுறித்து Adam Hockett கூறுகையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதால் நான் எந்த விவரங்களையும் கூற விரும்பவில்லை. ஆனால் அவர் குளியலறையில் ஒரு மருத்துவ அவசரநிலைக்காக போராடியிருப்பது தெளிவாகி தெரிகிறது.

அந்த நேரத்தில் தான் அவருடைய தலையில் பலமாக அடிபட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். துணை மருத்துவர்களின் அவதானிப்புகள் மற்றும் கருத்தின் அடிப்படையில், அவர் இறந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − twelve =

*