;
Athirady Tamil News

விளையாடிக்கொண்டே செல்போன் சார்ஜரை கடித்த குழந்தை: அடுத்து நடந்த பரிதாபம்..!!

0

செல்போன் சார்ஜரில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த போது, அதனை கடித்த 6 மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக தீ காயங்களுடன் உயிர் தப்பியுள்ளது

மத்திய மேற்கு பிரேசிலின் லூகாஸ் டோ ரியோ வெர்டேவில் உள்ள ஒரு வீட்டில் 6 மாத குழந்தை ஒன்று செல்போனுடன் விளையாடி கொண்டிருந்துள்ளது.

அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த சார்ஜரை குழந்தை கடித்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் குழந்தை மயங்கி விழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதன் பெற்றோர், வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவக்குழு தீவிர போராட்டத்திற்கு பின் குழந்தையை காப்பாற்றினர். இந்த சம்பவத்தில் குழந்தையின் முகம் மற்றும் வலது கையில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குழந்தைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை என்று கூறியுள்ள மருத்துவர்கள், தொண்டையில் திரவம் உருவாகுவதை அகற்ற செயல்முறை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் குழந்தை உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம். செல்போன்களுடன் இந்த வகையான விபத்துக்கள் பொதுவானவை மற்றும் தவிர்க்கக்கூடியவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − two =

*