;
Athirady Tamil News

முக்கிய வழக்கிலிருந்து ஆறுமுகன் தொண்டமான் விடுதலை!!

0

2002ஆம் ஆண்டு காணி தொடர்பாக ஏற்பட்ட தகராறு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட ஐந்து பேர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கின் விசாரணைகள் நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதிவாதிகளுக்கு எதிரான சாட்சியங்கள் நிருபிக்கப்படாமை காரணமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட ஐந்து பேரும் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி சிவஜோதி யோகராஜா தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*