;
Athirady Tamil News

திருவள்ளுவரின் திருவுருவச்சிலை ரதபவனிக்கு நாவிதன்வெளியில் வரவேற்பு!! (படங்கள் & வீடியோ)

0

காரைதீவில் 28ஆம் திகதி வெள்ளியன்று நிறுவப்படவிருக்கும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை ரதபவனி ஆரம்பமாகியுள்ளது.

குறித்த திருவள்ளுவரின் திருவுருவ சிலையானது எதிர்வரும் வெள்ளியன்று ( 28 ) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பகுதியில் நிறுவப்படவுள்ள நிலையில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே . ஜெயசிறில் தலைமையில் செவ்வாய்க்கிழமை(25) காலை முதல் சிற்றூர்தியில் ஊர்வலமாக பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் பார்வைக்காக எடுத்து செல்லப்பட்ட நிலையில் மதியம் நாவிதன்வெளி பிரதேச செயகத்தை வந்தடைந்தது.

இதன் போது உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா தலைமையிலான உத்தியோகத்தர்கள் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை மலர்மாலை அணிவித்தனர்.மேலும் இச்சைவப்புலவர் திருவள்ளுவர் திருவுருவச்சிலையானது இரண்டுநாள் யாழ் மண்ணிலிருந்து கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று(24) காரைதீவை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பமான இவ்வாகன ஊர்வலத்தில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்க சமூகமளித்திருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”


You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + twelve =

*