;
Athirady Tamil News

எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் வந்துவிட்டது – சிவநேசதுரை சந்திரகாந்தன்!! (படங்கள் & வீடியோ)

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை மார்ச் 17 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை வாகனத்தில் வைத்து ஊடங்களுக்கு கூறிய சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) அனைத்து கட்சிகளும் கிழக்கில் ஒன்றிணைகிறது இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டதிற்கு பதிலளிக்கையில் எல்லோரும் ஒன்று சேரத்தான் வேண்டும் என குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 25.12.2005 அன்று மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம், ,ராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் மீரா லெப்பை கலீல், முன்னாள் ,ராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று (25.02.2020) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.என். அப்துல்லாஹ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது மார்ச் மாதம் 17ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”





You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 20 =

*