;
Athirady Tamil News

ஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்!!

0

ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை புதன்கிழமை(26) முற்பகல்-10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பாகிறது.

தொடர்ச்சியாக 12 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு-08.30 மணியளவில் சப்பறத் திருவிழாவும், 07 ஆம் திகதி சனிக்கிழமை காலை-09 மணியளவில் இரதோற்சவமும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணியளவில் ஸ்ரீ புஷ்கரணியில் தீர்த்தோற்சவமும், மாலை- 06.30 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளது.

மஹோற்சவ காலங்களில் தினமும் காலை உற்சவம் காலை-08.30 மணியளவில் ஆரம்பமாகிப் பிற்பகல்-12.30 மணியளவில் நிறைவுபெறும். மாலை உற்சவம் பிற்பகல்-05 மணியளவில் ஆரம்பமாகி இரவு-09.30 மணியளவில் நிறைவுபெறும்.

உற்சவ காலங்களில் தினமும் மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 1 =

*