;
Athirady Tamil News

திட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் !!

0

சுற்றுலா மேற்கொள்வதற்கான உரிய திட்டம் இன்றியும், சுற்றுலாவின் பின்னர் தமது நாட்டுக்கு மீள செல்வதற்கான விமான பயணச்சீட்டு இன்றியும் இலங்கைக்குள் நுழைய முயற்சித்த பெனின் இராஜிய சுற்றுலா பயணி ஒருவர் விமான நிலையத்தில் இருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

குறித்த நபரை அவர் இலங்கைக்கு வந்த விமானத்திலேயே மீள திருப்பியனுப்ப விமான நிலைய குடிவரவு குடியல்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

41 வயதான வியாபாரி ஒருவரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை தோகாவில் இருந்து வருகைதந்த கிவ்.ஆர் – 664 விமானத்தின் மூலமே நாட்டை வந்தடைந்துள்ளார்.

இவ்வாறு வருகைதந்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சுற்றுலா மேற்கொள்வதற்கான உரிய திட்டம் மற்றும் சுற்றுலாவின் பின்னர் திரும்பி செல்வதற்கான விமான பயணச்சீட்டு இல்லாதிருந்தமை கணடறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறு வருகைதந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் தமது நாட்டில் கடன் அட்டை மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் தற்போது மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று வருகைதந்த பெனின் இராஜிய சுற்றுலா பயணியும் இன்று காலை அவரின் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை 10.50 அளவில் கிவ்.ஆர் – 665 என்ற கட்டார் விமானத்தில் திருப்பியனுப்பப்பட்டதாக விமான நிலைய நிலைய குடிவரவு குடியல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*