;
Athirady Tamil News

வெளிநாட்டில் தீம் பார்க்கில் தண்ணீரில் விழுந்த பிரித்தானிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!!!

0

தாய்லாந்திலுள்ள தீம் பார்க் ஒன்றில் தண்ணீரில் விழுந்த மூன்று வயது குழந்தை, அதன் பெற்றோர் கண் முன்பே பரிதாபமாக பலியானது.

தாய்லாந்தின் புக்கட்டிலுள்ள Blue Tree Waterparkஇற்கு தனது தந்தை வில்லியம், தாய் சுமித்ரா மற்றும் அண்ணன் பில்லியுடன் சென்றிருந்தான் பாபி வாட்சன்.

நீச்சல் குளம் ஒன்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த பாபி, தவறி தண்ணீருக்குள் விழுந்திருக்கிறான்.

பதறிப்போன பெற்றோர் உதவி கோரி சத்தமிடுவதற்குள் தண்ணீரில் மூழ்கியிருக்கிறான் பாபி.மருத்துவ உதவிக்குழுவினர் அவனை தண்ணீரிலிருந்து எடுக்கும்போதே சுயநினைவு இல்லாமல்தான் இருந்திருக்கிறான் பாபி

செயற்கை சுவாசம் முதலான முதலுதவி சிகிச்சைகள் அளித்து பாபியை காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்காமல் பரிதாபமாக பலியானான் பாபி.

பாபியின் மரணம் அவன் பெற்றோருக்கு மட்டுமின்றி, தீம் பார்க்கிற்கு சுற்றுலா வந்திருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + fourteen =

*